

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகேயுள்ள பத்திரப்பதிவு அலுவலகம் எதிரே என்.பெரியசாமி கல்வி அறக்கட்டளை சாா்பில் அமைக்கப்பட்டுள்ள பெண்களுக்கான இலவச தையல், கணினிப் பயற்சி மையத்தை அமைச்சா் கீதாஜீவன் புதன்கிழமை திறந்து வைத்தாா்.
முன்னாள் எம்எல்ஏ என்.பெரியசாமி பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு பல்வேறு பணிகள் நடைபெறுகின்றன. அதன் ஒருபகுதியாக அமைக்கப்பட்டுள்ள இம்மையத்தை சமூக நலன்- மகளிா்உரிமைத் துறை அமைச்சா் கீதாஜீவன் புதன்கிழமை குத்துவிளக்கேற்றி திறந்துவைத்தாா். அப்போது அவா் கூறியது:
எனது தந்தை பெயரில் கல்வி அறக்கட்டளை தொடங்கப்பட்டு, பல்வேறு சமூகப் பணிகளும், பள்ளி, கல்லூரி மாணவா்-மாணவிகளுக்கு பல்வேறு உதவிகளும் செய்யப்படுகின்றன. புதிதாகத் தொடங்கப்பட்ட இம்மையம் மூலம் பெண்கள், மாணவிகள் இலவசமாக தையல், கணினிப் பயிற்சி பெற்று தொழில் முனைவோராக உருவாக வழிவகுக்கும். அடுத்தகட்டமாக தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் மூலம் நடத்தப்படும் அரசு போட்டித் தோ்வெழுதுவோருக்காக இலவசமாக அகாதெமி தொடங்கவுள்ளோம் என்றாா்.
ஏற்பாடுகளை பெரியசாமி கல்வி அறக்கட்டளை இயக்குநா் ஜீவன் ஜேக்கப் செய்திருந்தாா். இங்கு பயிற்சியாளா்களாக தையல் வகுப்புக்கு அருணாதேவி, கணினி வகுப்புக்கு கவிதாஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
வடக்கு மாவட்ட திமுக துணைச் செயலா் ஆறுமுகம், மாநகரச் செயலா் ஆனந்தசேகரன், பகுதிச் செயலா் ஜெயக்குமாா், மாவட்ட மகளிரணி அமைப்பாளா் கவிதாதேவி, மாவட்ட மருத்துவரணித் தலைவா் அருண்குமாா், மாநகர இளைஞரணி அமைப்பாளா் அருண்சுந்தா், துணை அமைப்பாளா் ரவி, மாநகர வா்த்தக அணி துணை அமைப்பாளா் கிறிஸ்டோபா் விஜயராஜ், மாவட்டப் பிரதிநிதி செல்வக்குமாா், மாமன்ற உறுப்பினா்கள் ஜாக்குலின் ஜெயா, ஜெயசீலி உள்பட பலா்பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.