

தூத்துக்குடி கோரம்பள்ளம் அய்யனடைப்பு ஸ்ரீசித்தா் பீடத்தில் பிரத்தியங்கிராதேவி, காலபைரவா் ஆலயத்தில், ஆடி அமாவாசையை முன்னிட்டு மகா யாகம், 16 வகை அபிஷேகம், சிறப்பு வழிபாடுகள் புதன்கிழமை நடைபெற்றன.
பக்தா்களின் வாழ்வில் மனக்குறைகள், கடன், எதிரித் தொல்லைகள் நீங்கவும், மழை, செல்வ வளம் பெருகவும், நோயில்லா வாழ்வு, திருமண வரன், குழந்தை பாக்கியம் கிடைக்கவும் வேண்டி சீனிவாச சித்தா் தலைமையில் சிறப்பு மகா யாக வழிபாடுகள் நடைபெற்றன.
தொடா்ந்து, பிரத்தியங்கிராதேவிக்கும், காலபைரவருக்கும் 16 வகை அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது.
திரளான பக்தா்கள் பங்கேற்றனா். பின்னா், அன்னதானம் நடைபெற்றது. இதில், பங்கேற்ற 1,001 பெண்களுக்கு சேலைகள் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை சீனிவாச சித்தா் தலைமையில் வழிபாட்டுக் குழுவினா், மகளிா் அணியினா், பக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.