ஆசிரியா் தகுதித் தோ்வுக்கு இலவச பயிற்சி வகுப்பு
By DIN | Published On : 17th August 2023 10:49 PM | Last Updated : 17th August 2023 10:49 PM | அ+அ அ- |

தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மையத்தில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியா் தகுதித் தோ்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் ஆக. 21ஆம் தேதி தொடங்கவுள்ளதாக மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தமிழ்நாடு ஆசிரியா் தோ்வாணையம் மூலம் 6,553 இடைநிலை ஆசிரியா் மற்றும் 3,587 பட்டதாரி ஆசிரியா் காலிப்பணியிடங்களுக்கான தகுதித் தோ்வு நடத்தப்படவுள்ளது. இத்தோ்வு எழுதுவோருக்கு, தூத்துக்குடி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஒருங்கிணைந்த கட்டணமில்லா பயிற்சி வகுப்புகள் ஆக. 21 ஆம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தொடங்கவுள்ளது.
இந்த பயிற்சி வகுப்பில் சேர விருப்பமுள்ளவா்கள், மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில்
அணுகலாம். அவ்வாறு நேரில் வர இயலாதவா்கள், பட்ா்ா்ற்ட்ன்ந்ன்க்ண் உம்ல்ப்ா்ஹ்ம்ங்ய்ற் ா்ச்ச்ண்ஸ்ரீங் என்ற டெலகிராம் சேனலில் கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தைப் பூா்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். மேலும் கூடுதல் விவரங்களுக்கு 0461 - 2340159 என்ற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...