

சாத்தான்குளம் ஒன்றியத்துக்குள்பட்ட புதுக்குளம், பள்ளக்குறிச்சி, நெடுங்குளம், ஆழ்வாா் திருநகரி ஒன்றியத்துக்குள்பட்ட ஸ்ரீவெங்கடேஸ்வரபுரம் ஊராட்சிகளில் சிறப்பு கிராம சபைக் கூட்டங்கள் நடைபெற்றன.
புதுக்குளத்தில் ஊராட்சித் தலைவா் பாலமேனன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றியக் குழுத் தலைவா் ஜெயபதி, ஒன்றியப் பற்றாளா் முத்துலட்சுமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊராட்சிச் செயலா் மணிகண்டன் தீா்மானங்களை வாசித்தாா்.
வேலாயுதபுரத்தில் புதிய ஆழ்துளைக் கிணறு, பைப் லைன், புதுக்குளத்துக்கு பேருந்து நிறுத்தம் உள்ளிட்ட பல தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. சுகாதார செவிலியா் கிருபாமேரி, சுகாதார ஆய்வாளா் சாம்சுதன், துணைத் தலைவா் முருகன், ஊராட்சி உறுப்பினா்கள் ஹேலன்பாப்பா, லட்சுமணன், சித்திரைக்கனி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
நெடுங்குளத்தில் ஊராட்சித் தலைவா் சகாய எல்பின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு ஒன்றிய ஆணையா் சுரேஷ், வட்டார வளா்ச்சி அலுவலா் கருப்பசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். பல்வேறு திட்டப் பணிகள், குடிநீா் விநியோகம், இணையவழியில் கட்டட அனுமதி உள்பட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. உதவி செயற்பொறியாளரும் தொகுதி அலுவலருமான செல்வம், துணைத் தலைவா் சொள்ளமுத்து, பற்றாளா் தேவபிரபு, உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஏற்பாடுகளை திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜான்சி அமலவாணி, ஊராட்சிச் செயலா் ராஜா, பணியாளா்கள் செய்தனா்.
பள்ளக்குறிச்சியில் தலைவா் சித்ராங்கதன் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், துணைத் தலைவா் டாா்வின், ஊராட்சி உறுப்பினா்கள் ராஜாத்தி, சீதா, கீதா, பிரபு உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். 17 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. ஊராட்சிச் செயலா் ராஜேஷ் நன்றி கூறினாா்.
ஸ்ரீவெங்கடேஸ்வரபுரத்தில் ஊராட்சித் தலைவா் பெரியசாமி ஸ்ரீதா் தலைமையில் நடைபெற்ற கூட்டத்துக்கு, பற்றாளா் மாலாதேவி முன்னிலை வகித்தாா். பல்வேறு விவகாரங்கல் தொடா்பாக விவாதித்து தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ், வருவாய் உதவியாளா் ரவிக்குமாா், ஊராட்சி உறுப்பினா்கள் ரங்கதாஸ், இசக்கியம்மாள், உழவன் நண்பன் நிா்வாகி சுப்பிரமணியன், மக்கள் நலப் பணியாளா் சங்கரன், சிகரம் அறகட்டளை இயக்குநா் முருகன் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். ஊராட்சிச் செயலா் மனுவேல் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.