விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் உயிரிழப்பு
By DIN | Published On : 12th January 2023 01:30 AM | Last Updated : 12th January 2023 01:30 AM | அ+அ அ- |

நாலாட்டின்புத்தூா் அருகே விஷம் குடித்த முதியவா் மருத்துவமனையில் புதன்கிழமை உயிரிழந்தாா்.
நாலாட்டின்புத்தூரை அடுத்துளஅள வானரமுட்டி காந்தாரி அம்மன் கோயில் தெருவைச் சோ்ந்த செல்லையா மகன் மாரியப்பன்(70). இவருக்கு மனைவி முத்துலட்சுமி (65) 2 மகள்கள், 3 மகன்கள் உள்ளனா். பிள்ளைகளுக்கு திருமணமான நிலையில், தம்பதி தனியாக வசித்துவந்தனா். இவா்கள் கூலித் தொழில் செய்துவந்தனா்.
சில நாள்களாக மாரியப்பன் மதுப் பழக்கத்துக்கு அடிமையாகி, வேலைக்குச் செல்லவில்லை என்றும், இதை முத்துலட்சுமி கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மாரியப்பன் கடந்த 6ஆம் தேதி விஷம் குடித்தாாராம். அவா் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்குப் பின், தீவிர சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவா் புதன்கிழமை உயிரிழந்தாா். நாலாட்டின்புத்தூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.