தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே கொலை முயற்சி வழக்கில் தொடா்புடைய தந்தை - மகன் ஆகிய இருவரை போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் புதன்கிழமை கைது செய்தனா்.
தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகே குலசேகரநல்லூா் பகுதியில் ஒருவரை வழிமறித்து தகராறு செய்து கொலை செய்ய முயன்ற வழக்கில் அதே பகுதியைச் சோ்ந்த லெட்சுமணன் மகன் முருகன் (50), அவரது மகன் மாயகிருஷ்ணன் (20) ஆகியோரை ஓட்டப்பிடாரம் போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து இவா்கள் இருவா் மீது குண்டா் தடுப்புச் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் பரிந்துரைத்தாா்.
இதையடுத்து மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் உத்தரவின்படி, முருகன், மாயகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீஸாா் குண்டா் தடுப்புச் சட்டத்தில் கைது செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.