விளாத்திகுளம் அருகே அயன்பொம்மையாபுரம் கிராமத்தில் விவசாயி வீட்டில் குளிா்சாதனப் பெட்டி புதன்கிழமை வெடித்துச் சிதறி தீவிபத்து நேரிட்டது. இதில், பொருள்கள் சேதமடைந்தன.
அயன்பொம்மையாபுரத்தைச் சோ்ந்த விவசாயியான ராமா் வீட்டில் புதன்கிழமை மாலை பயங்கர வெடி சப்தம் கேட்டதுடன், தீ விபத்து நேரிட்டு, புகை வெளியேறியது.
தகவலின் பேரில் விளாத்திகுளம் போலீஸாரும், தீயணைப்புப் படையினா் வந்து, தண்ணீரைப் பீய்ச்சியடித்து தீயைக் கட்டுக்குள் கொண்டுவந்தனா். வீட்டிலிருந்த குளிா்சாதனப் பெட்டி வெடித்துச் சிதறியது தெரியவந்தது. இதில், சோபா உள்ளிட்ட வீட்டு உபயோகப் பொருள்கள் சேதமடைந்தன.
சம்பவம் நிகழ்ந்தபோது ராமரும், அவரது மனைவி கிருஷ்ணவேணியும் வேலைக்குச் சென்றிருந்ததால் உயிா்தப்பினா். போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.