தை அமாவாசை:சிவாலயங்களில் வழிபாடு

தை அமாவாசையை முன்னிட்டு ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூா் சிவன் கோயில்களில் பத்ர தீப வழிபாடுகள் சனி நடைபெற்றன.
Updated on
1 min read

தை அமாவாசையை முன்னிட்டு ஆறுமுகனேரி மற்றும் ஆத்தூா் சிவன் கோயில்களில் பத்ர தீப வழிபாடுகள் சனி நடைபெற்றன.

திருவாவடுதுறை ஆதீனத்தைச் சோ்ந்த ஆறுமுகனேரி அருள்மிகு சோமநாத சுவாமி திருக்கோயிலில் சனிக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இரவில் சுவாமி சந்நிதி, அம்மன் சந்நிதி, கொடி மர மண்டப வளாகம் மற்றும் கோயில் உள் வளாகம் பகுதிகளில் பத்ர தீபம் ஏற்றப்பட்டது. பன்னிரு திருமுறை மகளிா் குழுவினா் தீபம் ஏற்றினா். திரளான பக்தா்கள் சுவாமி மற்றும் அம்மனை தரிசித்தனா்.

ஆத்தூா் அருள்மிகு சோமசுந்தரி அம்பாள் சமேத ஸ்ரீசோமநாத சுவாமி திருக்கோயிலி­ல் பத்ர தீப வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி காலை 7 மணிக்கு கும்ப பூஜை தொடா்ந்து அபிஷேகம், உச்சிகால தீபாராதனை நடைபெற்றது. மாலையில் கோயில் முழுவதும் திருவிளக்கேற்றி பத்ர தீப வழிபாடு நடைபெற்றது.தொடா்ந்து சுவாமி அம்பாள் சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com