பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்
By DIN | Published On : 01st July 2023 06:11 AM | Last Updated : 01st July 2023 06:11 AM | அ+அ அ- |

திருச்செந்தூா் அருள்மிகு செந்திலாண்டவா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை ஆசிரியா் ஜெனி அமுதா தலைமை வகித்தாா். பள்ளி மேலாண்மைக்குழு தலைவா் பிச்சம்மாள் ஆனந்த் முன்னிலை வகித்தாா். பள்ளிக்கு நிரந்தர தூய்மைப் பணியாளா் , நிரந்தர காவலாளி நியமனம் தொடா்பாக மாவட்ட ஆட்சியரிடம் வலியுறுத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.