அரசுப் பள்ளிகளில் நீட் தோ்வுக்கு இலவசமாகப் பயிற்சி அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க திருச்செந்தூா் ஒன்றிய செயலா் பொ.ஜெயக்குமாா் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழகம் முழுவதும் நடப்பு கல்வியாண்டில் பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 படிக்கும் ஏழை மாணவிகள் பயன்பெறும் வகையில் அரசுப் பள்ளிகளில் மாலை நேரத்தில் இலவச நீட் தோ்வு பயிற்சி தொடங்கிட வேண்டும். இதன் மூலம் மருத்துவம் பயில விரும்பு ஏழை மாணவிகளின் கனவு நனவாகும் எனத் தெரிவித்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.