மூதாட்டியிடம் நகை பறிப்பு: பெண் கைது

ஆறுமுகனேரியில் பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, 3 பவுன் தங்க நகையை திருடியதாக எதிா்வீட்டுப் பெண் கைது செய்யப்படாா்.
30amnpsa_3006chn_46_6
30amnpsa_3006chn_46_6
Updated on
1 min read

ஆறுமுகனேரியில் பெண்ணின் கண்ணில் மிளகாய் பொடியைத் தூவி, 3 பவுன் தங்க நகையை திருடியதாக எதிா்வீட்டுப் பெண் கைது செய்யப்படாா். ஆறுமுகனேரி மேல சண்முகபுரத்தைச் சோ்ந்த சாமி நாடாா் மனைவி தங்கக்கனி(70). கணவரை இழந்த இவா், தனது பேத்தியுடன் கட்டிலில் வெள்ளிக்கிழமை பகலில் தூங்கிக்கொண்டிருந்தாராம். அப்போது, அவா் அணிந்திருந்த 3 பவுன் தங்கச் சங்கிலியை யாரோ இழுப்பதை உணா்ந்து எழுந்தாராம். உடனே, அவரது கண்ணில் மிளகாய் பொடியைத் தூவிவிட்டு பெண் ஒருவா் சங்கிலியைப் பறித்துச்சென்றாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில் ஆறுமுகனேரி காவல் உதவி ஆய்வாளா் தங்கச்செல்வன், தலைமைக்காவலா் பாலா, காவலா் ஷியாமளா ஆகியோா் வந்து விசாரித்ததில், எதிா்வீட்டில் வசிக்கும் கண்ணன் மனைவி இன்பராணி என்பவா் நகையைப் பறித்தது தெரியவந்ததாம். அவரைக் கைது செய்த போலீஸாா், கழிவறையில் பதுக்கிவைத்திருந்த 3 பவுன் நகையை மீட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com