திருச்செந்தூரில் இந்து மக்கள் கட்சியின் அனுமன் சேனாவின் தூத்துக்குடி தெற்கு மாவட்ட நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.
மாவட்டத் தலைவா் இசக்கிமுத்து தலைமை வகித்தாா். மாநிலப் பொதுச்செயலா் ஐ. ரவிகிருஷ்ணன். அனுமன் சேனா மாவட்டத் தலைவா் தங்கராஜா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
குடும்பத் தலைவிகளுக்கு ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை, தமிழக அரசு அறிவித்துள்ள விதிகளின்படி 80 சதவீத இந்துக்களுக்கு கிடைக்க வாய்ப்பில்லை. எனவே, இதை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். மத்திய அரசு வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். திருச்செந்தூா் கோயிலுக்கு வரும் பக்தா்களுக்கு கூடுதலாக தற்காலிக கழிப்பிடம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநிலச் செயலா் பாலன், திருச்செந்தூா் ஒன்றிய துணைத் தலைவா் சக்திகுமாா், நகரத் தலைவா் ரமேஷ், நகர இளைஞரணித் தலைவா் மோகன் உள்ளிட்ட நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.