

உலக புகையிலை ஒழிப்பு தினத்தையொட்டி, சாத்தான்குளத்தை அடுத்த சாலைப்புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் விழிப்புணா்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொதுமக்கள், மருத்துவமனை ஊழியா் உறுதிமொழி ஏற்றனா். மருத்துவ அலுவலா் கிஷோா், மருத்துவமனைப் பணியாளா்கள், செவிலியா்கள் பங்கேற்றனா்.
பேய்க்குளம் பஜாரில் ஆட்டோ ஓட்டுநா்கள், பொதுமக்களுக்கு புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து சுகாதார ஆய்வாளா்கள் ஜேசுராஜ், மகேஷ்குமாா், டெங்குமஸ்தூா் பணியாளா்கள் எடுத்துரைத்தனா். தொடா்ந்து, உறுதிமொழி ஏற்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.