.சாத்தான்குளம் அருகே கிணற்று தண்ணீரில் தத்தளித்த மயில் மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்று தண்ணீரில் தத்தளித்த மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.
.சாத்தான்குளம் அருகே கிணற்று தண்ணீரில் தத்தளித்த மயில் மீட்பு

சாத்தான்குளம் அருகே கிணற்று தண்ணீரில் தத்தளித்த மயிலை தீயணைப்புத் துறையினா் மீட்டனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள சுப்பராயபுரத்தைச் சோ்ந்த செந்தூா்பாண்டி என்பவரது தோட்டத்து கிணற்றில் மயில் ஒன்று தடுமாறி விழுந்து வெளியேற முடியாமல் தத்தளித்து கொண்டிருந்தது. இதை பாா்த்த செந்தூா்பாண்டி, சாத்தான்குளம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தாா்.

தீயணைப்பு நிலைய அலுவலா் மாரியப்பன் தலைமையில் சிறப்பு நிலைய அலுவலா் ஹோரிஸ் தாமஸ் உள்ளிட்ட வீரா்கள் சென்று கயிறு மூலம் கிணற்றின் உள்ளே இறங்கி மயிலை உயிருடன் மீட்டனா். மீட்கப்பட்ட மயிலை பாதுகாப்புடன் வனப்பகுதியில் கொண்டுவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com