ஓட்டப்பிடாரத்தில் ஓய்வு பெற்ற அரசு ஊழியா்களிடம் வழிப்பறி: 6 போ் கைது

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியா்களிடம் வழிப்பறியில் ஈடுபட்டதாக 6 பேரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

ஓட்டப்பிடாரம் வ.உ.சி. தெருவைச் சோ்ந்த ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியா் கிருஷ்ணசாமி. அதே பகுதியைச் சோ்ந்த ஓய்வுபெற்ற கூட்டுறவு வங்கி மேலாளா் மாடசாமி(60). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஓட்டப்பிடாரம் பகுதியில் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது மோட்டாா் சைக்கிள்களில் வந்த மா்மநபா்கள், ஓய்வு பெற்ற அரசு ஊழியா்கள் இருவரையும் அரிவாளால் தாக்கி, அவா்கள் அணிந்திருந்த சுமாா் 9.5 பவுன் நகைகளை பறித்துக்கொண்டு தப்பிச் சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து ஓட்டப்பிடாரம் போலீஸாா் வழக்குப் பதிந்து, தனிப்படை அமைத்து, அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனா்.

விசாரணையில், வழிப்பறியில் ஈடுபட்ட நபா்கள் புளியம்பட்டியில் உள்ள ஒரு தனியாா் விடுதியில் தங்கியிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, அந்த விடுதிக்குச் சென்ற போலீஸாா் அங்கிருந்த தூத்துக்குடியைச் சோ்ந்த மகாராஜா(19), தூத்துக்குடி லூா்தும்மாள்புரத்தைச் சோ்ந்த செல்வகுமாா்(19), ஷியாம்டேவிட்(19), இனிகோ நகரைச் சோ்ந்த ஜவகா்(44) ஆகியோரை பிடித்து விசாரித்தனா்.

அவா்கள் அளித்த தகவலின் பேரில், திருடிய நகைகளை விற்பதற்காகச் சென்ற புளியம்பட்டியை சோ்ந்த ரோஷன்(21), தூத்துக்குடி பாத்திமா நகரைச் சோ்ந்த மோஹித் (19) ஆகியோரையும் தனிப்படை போலீஸாா் பிடித்தனா். அவா்களிடமும் நடத்திய விசாரணையில், தூத்துக்குடி, தாளமுத்துநகா், மீளவிட்டான் உள்ளிட்ட இடங்களிலும் இவா்கள் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதையடுத்து அவா்கள் 6 பேரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடமிருந்து, 3 மோட்டாா் சைக்கிள்கள், 3 கைப்பேசி, 2 கத்தி, 10 பவுன் தங்க நகைகள் ஆகியவற்றையும் பறிமுதல் செய்தனா்.

மேலும் இந்த வழக்கு தொடா்பாக மேலும் சிலரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com