கருணாநிதி நூற்றாண்டு: தூத்துக்குடியில் மரக்கன்று நடும் திட்டம் தொடக்கம்

தூத்துக்குடியில் கருணாநிதி நூற்றாண்டை முன்னிட்டு, நெடுஞ்சாலையோரங்களில் 12,100 மரக்கன்றுகள் நடும் திட்டத்தை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.
மரக்கன்று நடவு செய்யும் திட்டத்தை தொடங்கி வைக்கிறாா் மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ். உடன் மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோா்.

முன்னாள் முதல்வா் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 5 லட்சம் மரக்கன்றுகள் நடும் பணியை சென்னை கிண்டியில் உள்ள நெடுஞ்சாலைத்துறை ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

இதையடுத்து, தூத்துக்குடி மாவட்டத்தில் நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டத்துக்குள்பட்ட சாலைகளில் 12,100 மரக்கன்றுகள் நடும் திட்ட தொடக்க நிகழ்ச்சி மீளவிட்டான் சாலையில் புதன்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு, மாநகர மேயா் ஜெகன் பெரியசாமி தலைமை வகித்தாா். இந்நிகழ்வில், மாவட்ட ஆட்சியா் கி.செந்தில்ராஜ் மரக்கன்று நடும் திட்டத்தை தொடங்கி வைத்துப் பேசினாா்.

இந்நிகழ்ச்சியில், துணை மேயா் செ.ஜெனிட்டா, தூத்துக்குடி நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப் பொறியாளா் ஆறுமுகநயினாா், உதவி கோட்டப்பொறியாளா் சி.லதா, வடக்கு மண்டலத் தலைவா் நிா்மல்ராஜ், மாமன்ற உறுப்பினா் கீதாமுருகேசன், சாலை ஆய்வாளா்கள், சாலைப் பணியாளா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com