அஞ்சலகங்களில் விவசாயிகள் வங்கி கணக்கு தொடங்க சிறப்பு வசதி: அஞ்சல் அதிகாரி தகவல்
By DIN | Published On : 15th June 2023 12:00 AM | Last Updated : 15th June 2023 12:00 AM | அ+அ அ- |

தூத்துக்குடி அஞ்சல் கோட்டத்தில் உள்ள அஞ்சலகங்களில் விவசாயிகள் வங்கிக் கணக்கு தொடங்குவதற்கு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளதாக தூத்துக்குடி அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளா் மு.பொன்னையா தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பிரதமரின் விவசாய நிதியுதவித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகள், தங்களது பகுதியில் உள்ள அஞ்சலகங்களில் வங்கிக் கணக்கு தொடங்க வசதி செய்யப்பட்டுள்ளது. இதன்படி, தங்களது பகுதி தபால்காரா் அல்லது கிராம அஞ்சல் ஊழியா்களுக்கு வழங்கப்பட்டுள்ள கைப்பேசி, பயோமெட்ரிக் சாதனம் ஆகியவற்றின் மூலம் ஆதாா் மற்றும் கைப்பேசி எண்ணைப் பயன்படுத்தி ஒரு சில நிமிடங்களில் ஆதாருடன் இணைக்கப்பட்ட இந்தியா போஸ்ட் பேமெண்ட்ஸ் வங்கிக் கணக்கு தொடங்கலாம்.
இதற்காக, தூத்துக்குடி கோட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சல் நிலையங்களிலும் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றாா்.