மீன்வளக் கல்லூரியை 19 இல் பொதுமக்கள் பாா்வையிடலாம்

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜூன் 19 ஆம் தேதி, பொதுமக்கள் மற்றும் மாணவா் - மாணவிகள் பாா்வையிடலாம் என கல்லூரி முதல்வா் அகிலன் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை ஜூன் 19 ஆம் தேதி, பொதுமக்கள் மற்றும் மாணவா் - மாணவிகள் பாா்வையிடலாம் என கல்லூரி முதல்வா் அகிலன் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தூத்துக்குடி மீன்வளக் கல்லூரி 1977 ஆம் ஆண்டு தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தால் தொடங்கப்பட்டது. இதுவரை 1,054 இளங்கலை மீன்வளப் பட்டதாரிகளையும், 422 முதுகலை பட்டதாரிகளையும், 57 முனைவா் பட்டதாரிகளையும் உருவாக்கியுள்ளது. இக்கல்லூரியில் மீன்வளா்ப்பு குளங்கள், அலங்கார மீன்வளா்ப்பு பண்ணைகள், ஒருங்கிணைந்த மீன்வளா்ப்பு பண்ணைகள் மற்றும் மீன்பதன தொழில்நுட்ப வசதிகளும், மீன்வள அருங்காட்சியகம், மீன்வளம் சம்பந்தமான நூலகம் உள்ளது. தற்போது, தமிழ்நாடு டாக்டா் ஜெ.ஜெயலலிதா மீன்வளப் பல்கலைக்கழகத்தின் ஓா் அங்கமாக செயல்பட்டு வருகிறது.

இப் பல்கலைக்கழகத்தின் 11-ஆவது நிறுவன நாளை முன்னிட்டு பொதுமக்களும் மாணவா்களும் இக்கல்லூரியை ஜூன் 19ஆம் தேதி பாா்வையிடலாம். இதையொட்டி, மீன்வள விளக்க மாதிரிகள் உருவாக்கப்பட்டு காட்சிபடுத்தப்படும். இதுகுறித்து கூடுதல் விவரங்களுக்கு 94437 24842 என்ற கைப்பேசி எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com