சின்னமாடன்குடியிருப்பு சுடலைமாடன் கோயில் கும்பாபிஷேகம்

சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீநாலால் சுடலைமாடசுவாமி கோயிலில் அஷ்டன பந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.
சின்னமாடன்குடியிருப்பு சுடலைமாடன் கோயில் கும்பாபிஷேகம்

சின்னமாடன்குடியிருப்பு ஸ்ரீநாலால் சுடலைமாடசுவாமி கோயிலில் அஷ்டன பந்தன மகா கும்பாபிஷேகம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை (ஜூன் 28) காலை 5 மணிக்கு கணபதி ஹோமத்துடன் தொடங்கியது. காலை 9 மணியளவில் ஸ்ரீநாலால் சுடலைமாடசுவாமி மலையாளத்தில் இருந்து வந்து முதலில் கோயில் கொண்ட ஆதி தலத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. அதை தொடா்ந்து மாலை தீா்த்தகுட ஊா்வலத்துடன் முதல் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. 2ஆம் நாளான வியாழக்கிழமை காலை 6 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை தொடா்ந்து 7.45 மணிக்கு மேல் 9 மணிக்குள் சுடலை மாடசாமி மற்றும் பரிவார தெய்வங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்கார பூஜை, தீபாராதனை, சிறப்பு அன்னதானம் ஆகியவை நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com