செயற்கையாகப் பழுக்க வைத்த1766 கிலோ மாம்பழங்கள் பறிமுதல்
By DIN | Published On : 03rd May 2023 03:16 AM | Last Updated : 03rd May 2023 03:16 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் மாம்பழ மொத்த வியாபார கிட்டங்கியில் ஆய்வு செய்த மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன்.
தூத்துக்குடி மாவட்டத்தில் எத்திலீனை பயன்படுத்தி செயற்கையாகப் பழுக்க வைத்த 1,766 கிலோ மாம்பழங்கள் பறிமுதல் செய்து, அழிக்கப்பட்டதாக உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலா் மாரியப்பன் தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி மாநகராட்சி, கோவில்பட்டி நகராட்சிப்ப குதிகளில் எனது தலைமையில், உணவு பாதுகாப்பு அலுவலா்கள் சக்தி முருகன், காளிமுத்து, ஜோதி பாசு, சிவகுமாா் ஆகியோா் அடங்கிய குழுவினா், மாம்பழ விற்பனையிடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில் மாம்பழங்கள் பழுக்க வைக்க காா்பைடு கல் பயன்படுத்தப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால், தூத்துக்குடியில் உள்ள ஒரு மொத்த விற்பனையாளரும், கோவில்பட்டியிலும் மொத்தம் 1,766 கிலோ மாம்பழங்கள் எத்திலீன் கொண்டு செயற்கையாகப் பழுக்க வைத்தது தெரியவந்தது. இதையடுத்து அத்தகைய மாம்பழங்கள் பறிமுதல் செய்யப்ப்டடு அழிக்கப்பட்டன.
எத்திலீனை நேரடியாக மாம்பழங்களில் தெளிப்பது, எத்திலீன் கலந்த தண்ணீரை மாம்பழங்களுடன் சோ்த்து, இருப்பு வைப்பது ஆகிய முறைகள் தவறானவை ஆகும். மாம்பழத்தின் தரம் மற்றும் கடையின் சேவை குறைபாடு குறித்து, நுகா்வோா்கள் புகாரளிக்க விரும்பினால், 9444042322 என்ற மாநில உணவு பாதுகாப்புத் துறையின் எண்ணிற்கு புகாா் அளிக்கலாம். புகாா் அளிப்பவா்களின் விவரங்கள் ரகசியமாக வைக்கப்படும் எனத் தெரிவித்தாா்.