கோவில்பட்டி, கயத்தாறில் 16இல் ஜமாபந்தி தொடக்கம்
By DIN | Published On : 12th May 2023 12:42 AM | Last Updated : 12th May 2023 12:42 AM | அ+அ அ- |

கோவில்பட்டி, கயத்தாறு வட்டாட்சியா் அலுவலகங்களில் ஆண்டு வருவாய் தீா்வாயக் கணக்குகள் சரிபாா்க்கும் பணி மே 16இல் தொடங்கி மே 23வரை நடைபெறவுள்ளன.
இதுகுறித்து கோவில்பட்டி வட்டாட்சியா் வசந்த மல்லிகா வெளியிட்ட செய்திக்குறிப்பில், கழுகுமலை, இளையரசனேந்தல், கோவில்பட்டி குறுவட்டங்களுக்கு இந்தப் பணி மேற்குறிப்பிட்ட நாள்களில் வட்டாட்சியா் அலுவலகத்தில் நாள்தோறும் காலை 10 மணிக்கு மாவட்ட வருவாய் அலுவலா் அஜய் சீனிவாசன் தலைமையில் நடைபெறும் என்றாா்.
கயத்தாறு வட்டாட்சியா் நாகராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பில், செட்டிக்குறிச்சி, காமநாயக்கன்பட்டி, கடம்பூா், கயத்தாறு குறுவட்டங்களுக்கு இந்தப் பணி வட்டாட்சியா் அலுவலகத்தில் தூத்துக்குடி தனித் துணை ஆட்சியா் (ச.பா.தி.) ஜேன்கிறிஸ்டிபாய் தலைமையில் நடைபெறும். மக்கள் தங்களது கிராமங்களுக்கு ஒதுக்கப்பட்ட நாளில் பட்டா மாற்றம், பெயா் மாற்றம், வருவாய் துறை குறித்த குறைபாடுகள் இருந்தால் எழுத்து மூலமாக ஆவணங்களுடன் தெரிவிக்கலாம் என்றாா்.