உடன்குடி கல்லூரியில் இஸ்லாமிய வரலாற்றுக் கண்காட்சி
By DIN | Published On : 12th May 2023 12:53 AM | Last Updated : 12th May 2023 12:53 AM | அ+அ அ- |

கண்காட்சியைத் திறந்துவைத்துப் பாா்வையிட்ட தமுமுக-மமக மாநிலத் தலைவா் ஜவாஹிருல்லாஹ் எம்எல்ஏ.
உடன்குடி பெரிய தெரு இமாம் ஷாஃபிஈ மகளிா் அரபுக் கல்லூரியில் 18ஆவது பட்டமளிப்பு விழாவையொட்டி, இஸ்லாமிய வரலாற்றுக் கண்காட்சி வியாழக்கிழமை நடைபெற்றது.
தமுமுக-மமக தலைவரும் பாபநாசம் எம்எல்ஏவுமான ஜவாஹிருல்லாஹ் பங்கேற்று, கண்காட்சியைத் திறந்துவைத்தாா். அதில் வைக்கப்பட்டிருந்த இஸ்லாமிய வரலாற்றிடங்கள், ஆடம்பர திருமணம் தவிா்ப்பு, பல்வேறு மொழிகளில் வைக்கப்பட்டிருந்த திருக்குரான் புத்தகங்கள், இஸ்லாம் உலகுக்கு வழங்கிய அருள்கொடைகள் குறித்த விவரங்கள் ஆகியவற்றை மாணவிகளிடம் கேட்டறிந்தாா்.
கல்லூரி நிறுவனா் அபுஉபைதா, முதல்வா் ஜஹ்பா் சாதிக், தமுமுக மாவட்டத் தலைவா் ஆசாத், பேரூராட்சி முன்னாள் உறுப்பினா் மகபூப், மமக மாநிலச் செயலா் ஜோசப் நொலாஸ்கோ உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.