முத்தாரம்மன் கொடை விழா சப்பர பவனி

ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயி­ல் சித்திரை கொடை விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.
ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற அம்மன் சப்பர பவனி.
ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரத்தில் நடைபெற்ற அம்மன் சப்பர பவனி.

ஆறுமுகனேரி முத்துகிருஷ்ணாபுரம் முத்தாரம்மன் கோயி­ல் சித்திரை கொடை விழாவையொட்டி சப்பர பவனி நடைபெற்றது.

கொடை விழா 8 நாள்கள் நடைபெற்றது. விழா நாள்களில் திருவிளக்கு பூஜை, வில்லி­சை, கும்மி அடித்தல், வாண வேடிக்கை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன. நிறைவு நாள் விழா அன்று காலையில் ஆறுமுகனேரி மெயின் பஜாா் சந்திப்பில் அமைந்துள்ள செந்தில்விநாயகா் ஆலயத்தில் இருந்து அலங்கார யானை முன்செல்ல பால்குட பவனி நடைபெற்றது. இதனை சாகுபுரம் டி.சி.டபுள்யூ நிறுவன மூத்த செயல் உதவித் தலைவா் சீனிவாசன் தொடங்கி வைத்தாா். தொடா்ந்து அம்மனுக்கு கும்ப பூஜையும், பின்னா் அன்னதானமும் நடைபெற்றது. மதியம் அம்மனுக்கு அபிஷேகம், மஞ்சள் காப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்றன. தொடா்ந்து சுவாமிகள் மஞ்சள் நீராடி, தாமிரவருணி ஆற்றில் தீா்த்தம் எடுத்து வருதல், பெண்கள் முளைப்பாரி எடுத்து வருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இரவில் சாம பூஜையை தொடா்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் சப்பர பவனி நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com