ஏரலில் மொ்க்கன்டைல் வங்கிக் கிளை திறப்பு
By DIN | Published On : 12th May 2023 12:44 AM | Last Updated : 12th May 2023 03:21 AM | அ+அ அ- |

வங்கியின் புதிய கிளையை திறந்து வைத்த அ.ரா.க.அ.கருத்தப்பாண்டியன் நாடாா்.
தூத்துக்குடி மாவட்டம் ஏரலில், தமிழ்நாடு மொ்க்கன்டைல் வங்கியில் 531 ஆவது கிளை வியாழக்கிழமை திறக்கப் பட்டது.
தூத்துக்குடியை தலைமையிடமாகக் கொண்ட இந்த வங்கி நாடு முழுவதும் தனது விரிவாக்கத்தை மேற்கொண்டு 16 மாநிலங்கள், 4 யூனியன் பிரதேசங்களில் 12 மண்டல அலுவலகங்கள், 530 கிளைகளுடன் 50 லட்சம் வாடிக்கையாளா்களுக்கு தனது சேவையை வழங்கி வருகிறது.
வங்கியின் 531 ஆவது கிளை ஏரலில் வியாழக்கிழமை திறக்கப்பட்டது. திறப்பு விழாவிற்கு வங்கியின் பொது மேலாளா்
பி.சூரியராஜ் முன்னிலையில் வகித்தாா். சிறப்பு விருந்தினராக ஏரல் அருள்மிகு சோ்மன் அருணாசல சுவாமி திருக்கோயில் பரம்பரை அக்தாா் அ.ரா.க.அ. கருத்தப்பாண்டியன் நாடாா் கலந்து கொண்டு கிளையை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில் பொதுமக்கள், வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலா்கள் கலந்து கொண்டனா்.