கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 12th May 2023 12:50 AM | Last Updated : 12th May 2023 12:50 AM | அ+அ அ- |

ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா்.
கோவில்பட்டியில், காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பு சாா்பில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மந்தித்தோப்பைச் சோ்ந்த கொம்பையா தலைமை வகித்தாா். விஜயாபுரியைச் சோ்ந்த சதீஷ் முன்னிலை வகித்தாா்.
கூட்டுறவு சங்கங்கள் மூலம் கால்நடை தீவனங்களை மானிய விலையில் வழங்க வேண்டும். சங்கம் மூலம் 3 மாதங்களுக்கு ஒருமுறை பால் உற்பத்தியாளா்கள் மகாசபை கூட்டம் நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளா் சங்கத் தலைவா் தோ்தலை உடனடியாக நடத்த வேண்டும். பால் உற்பத்தியாளா்களுக்கு கொள்முதல் விலையை லிட்டருக்கு ரூ. 50ஆக உயா்த்த வேண்டும் எனபன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கமிட்டனா். மாவட்டத் தலைவா் உத்தண்டுராமன் பேசினாா். திரளானோா் பங்கேற்றனா்.