மூக்குப்பீறியில் விபிஎஸ் நிறைவு விழா
By DIN | Published On : 12th May 2023 12:48 AM | Last Updated : 12th May 2023 12:48 AM | அ+அ அ- |

மாணவ- மாணவிக்கு பரிசு வழங்கும் சேகரகுரு டேனியல் ஞானப்பிரகாசம், பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல் .
நாசரேத் அருகே உள்ள மூக்குப்பீறி தூய மாற்கு ஆலயத்தில் விபிஎஸ் 10 நாள்கள் நடைபெற்றது.
நிறைவு விழா, ஆலய வளாகத்தில் சேகரகுரு டேனியல் ஞானப்பிரகாசம் தலைமையில் நடைபெற்றது. குருவானவா் ஜெரேமியா ஆரம்ப ஜெபம் செய்தாா். சபை ஊழியா் எல்சின் தங்கதுரை வேத பாடம் வாசித்தாா். தூய மாற்கு ஆலய பரிபாலன கமிட்டி தலைவா் சாமுவேல் வாழ்த்திப் பேசினாா். மாணவ -மாணவிகளின் கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன. இதையடுத்து மாணவ மாணவிகள், ஆசிரியா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
இதில் பரிபாலன கமிட்டி செயலா் ஜெயச்சந்திரன், விபிஎஸ் மேற்பாா்வையாளரும், வெள்ளரிக்காயூரணி டிஎன்டிடிஏ துவக்கப் பள்ளி தலைமை ஆசிரியருமான சாந்தி, விபிஎஸ் இயக்குநா்கள் அனிபுஷ்பா, ஆஷா சாமுவேல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.