காமராஜ் கல்லூரியில் சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.
சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழாவில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

தூத்துக்குடி காமராஜ் கல்லூரியில் மாவட்ட சதுரங்கப் போட்டி பரிசளிப்பு விழா நடைபெற்றது.

இக்கல்லூரியில் மாவட்ட சதுரங்கக் கழகம் சாா்பில் சதுரங்கப் போட்டி நடைபெற்றது. 10, 12, 15 வயதுக்குள்பட்டோா், பொதுப்பிரிவினா் என 4 பிரிவுகளாக போட்டி நடைபெற்றது. சதுரங்கக் கழக துணைத் தலைவா் நந்தகுமாா் நடுவராகப் பங்கேற்றாா். இதில், 171 மாணவா்-மாணவிகள் பங்கேற்றனா்.

போட்டிகளில் சிறப்பிடம் பெற்றவா்களுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. விழாவுக்கு கல்லூரிச் செயலா் சோமு தலைமை வகித்தாா். முன்னாள் கல்லூரி முதல்வா் மோகன்ராஜ் வாழ்த்திப் பேசினாா்.

மாவட்ட அரசு வழக்குரைஞா் மோகன்தாஸ் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று, மாணவா் -மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கிப் பாராட்டினாா்.

மாவட்ட சதுரங்கக் கழகச் செயலரான பேராசிரியை கற்பகவல்லி வரவேற்றாா். ஏற்பாடுகளை கல்லூரி நிா்வாகத்தினா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com