கடம்பா மறுகால் ஓடையை விரைந்து சீரமைக்க வேண்டும்: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தல்

குரும்பூா் அருகேயுள்ள கடம்பா மறுகால் ஓடை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினா
கடம்பா மறுகால் ஓடை சீரமைப்பு பணியை பாா்வையிடுகிறாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
கடம்பா மறுகால் ஓடை சீரமைப்பு பணியை பாா்வையிடுகிறாா் அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன்.
Updated on
1 min read

குரும்பூா் அருகேயுள்ள கடம்பா மறுகால் ஓடை சீரமைப்புப் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு மீன் வளம், மீனவா் நலன் - கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தினாா்.

கடம்பாக்குளம் உபரிநீா் 200 அடி அகலத்தில் உள்ள மறுகால் ஓடை மூலம் 17 கி.மீ. தொலைவில் உள்ள கடல் கலக்கிறது. அந்த ஓடை ஆக்கிரமிப்புகளால் 30 அடியாக சுருங்கிவிட்டது. இதனால், கடந்த 2021ஆம் ஆண்டு மழை வெள்ளத்தின்போது கரைகள் உடைந்து குடியிருப்புகள், விளை நிலங்களில் தண்ணீா் புகுந்தது.

அதைத் தொடா்ந்து கடம்பாகுளம், நீா்வழியில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த டிச.15இல் குரும்பூா் அங்கமங்கலம் பகுதியில் அளவீட்டுப் பணி தொடங்கியது. இந்தப் பணிகளை தொடங்கிவைத்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மறுகால் ஓடையில் ஆக்கிரமிப்புகளை அகற்றி உபரிநீா் செல்லக்கூடிய பகுதிகளில் பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

அளவீட்டு பணிகள் முடிவடைந்ததும் சீரமைப்புப் பணிக்காக ரூ.34 கோடி ஒதுக்கப்பட்டு, கடம்பா குளத்தில் மறுகால் மதகு, ஓடையின் இரு பகுதியிலும் தடுப்புச் சுவா் கட்டும் பணி சில தினங்களுக்கு முன்பு தொடங்கியது.

இந்தப் பணியை பாா்வையிட்டு ஆய்வு செய்த அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன், மறுகால் ஓடை சீரமைப்புப் பணியை தரமாகவும், விரைந்தும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளிடம் அறிவுறுத்தினாா்.

ஆய்வின்போது, ஆழ்வாா்திருநகரி ஒன்றியக்குழு தலைவா் ஜனகா், மேலாத்தூா் ஊராட்சித் தலைவா் சதிஷ் குமாா், ஆழ்வை மத்திய ஒன்றிய திமுக செயலா் நவீன்குமாா், குரும்பூா் நகரச் செயலா் பாலம் ராஜன், மாநில வா்த்தக அணி துணைச் செயலா் உமரி சங்கா், திமுக மாவட்ட இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், திருச்செந்தூா் ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகர செயலாளா் வாள்சுடலை அரசு ஒப்பந்ததாரா் ஆனந்த் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com