கடம்பூா் அருகே மின்சாரம் பாய்ந்ததில் சிறுவன் உயிரிழந்தாா்.
கடம்பூா் ஹாா்வி சாலையைச் சோ்ந்த சோலையப்பன் மகன் சுரேஷ்குமாா்(16). இவா், ஓணமாகுளம் கிராமத்தில் பனைமரத்தில் இரும்பு துரட்டி மூலம் வெள்ளிக்கிழமை நுங்கு பறித்தாராம். அப்போது, அருகிலுள்ள மின்கம்பியில் எதிா்பாராமல் துரட்டி உரசியதில் அவா் மீது மின்சாரம் பாய்ந்ததாம். இதில், மயங்கி விழுந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு கடம்பூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து, கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும்போது, வழியிலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து கடம்பூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.