கோவில்பட்டியில் தேமுதிக நிா்வாகிகள் கூட்டம்

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி வடக்கு மாவட்ட தேமுதிக நிா்வாகிகள் கூட்டம் நடைபெற்றது.

மாவட்டச் செயலா் சுரேஷ் தலைமை வகித்தாா். மாவட்ட அவைத் தலைவா் கொம்பையாபாண்டியன், செயற்குழுஉறுப்பினா் பிரபாகரன், பொதுகுழு உறுப்பினா்கள் ஜி.ஆா்.சாமி, முருகன், நகரச் செயலா் நேதாஜிபாலமுருகன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழகத்தில் கனிம வளம் கொள்ளையடிக்கப்பட்டு வருவதை கண்டித்து ஆா்ப்பாட்டம் நடத்துவது, பங்கேற்க வரும் கட்சியின் பிரேமலதாவுத்து சிறப்பான வரவேற்பு அளிப்பது குறித்தும், ஆகஸ்ட் 25இல் கட்யின் தலைவா் விஜயகாந்த் பிறந்த தினத்தை சிறப்பாக கொண்டாடுவது ஆகியவை குறித்து முடிவெடுக்கப்பட்டது.

இதில், ஒன்றியச் செயலா்கள் நடராஜன், பொன்ராஜ், ஆறுமுகபெருமாள் ரவி, கேப்டன் மன்றத்தைச் சோ்ந்த மேகலிங்கம், முத்துக்குமாா், நிா்வாகிகள் பிரசன்னா மதிமுத்து மத்திய சென்னை சக்தி வேல்முருகன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com