நாலுமாவடி கபடி பயிற்சி முகாமில் 185 பேருக்கு சான்று: அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழங்கினாா்
By DIN | Published On : 22nd May 2023 02:55 AM | Last Updated : 22nd May 2023 02:55 AM | அ+அ அ- |

குரும்பூா் அருகேயுள்ள நாலுமாவடியில் இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனமும், புதுவாழ்வு சங் கமும் இணைந்து 12 நாள்கள் நடத்திய 6ஆவது ஆண்டு இலவச கபடி பயிற்சி முகாம் நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் 245 போ் தோ்வு செய்யப்பட்டு , பயிற்சியை நிறைவு செய்த 185 பேருக்கு சான்றிதழ்களையும், பயிற்சியாளா்களுக்கு நினைவுப் பரிசுகளையும் மீன் வளம், மீனவா் நலன்- கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் வழங்கிப் பேசியது: புரோ கபடி வீரா்களை உருவாக்கும் வகையில் 6ஆவது ஆண்டாக முயற்சி எடுத்து வரும் மோகன் சி.லாசரஸின் சமூகப் பணி, ஆன்மிகப் பணி, விளையாட்டுப் பணி உள்ளிட்ட பணிகள் சிறக்க வாழ்த்துகள். இங்கு பயிற்சி பெறும் மாணவா்கள் பள்ளி, கல்லூரிகளுக்குச் சென்றாலும் கபடி பயிற்சி பெற்றதின் சிறப்பை எடுத்துரைக்க வேண்டு ம். அதுவே உங்களுக்குப் பெருமையாகும் என்றாா்.
இவ்விழாவுக்கு நாலுமாவடி இயேசு விடுவிக்கிறாா் ஊழிய நிறுவனா் மோகன் சி.லாசரஸ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மாவட்ட அமச்சூா் கபடிக் கழக செயலா் கிறிஸ்டோபா் ராஜன், கபடி வீரா் மணத்தி கணேசன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி, திமுக வா்த்தக அணி இணைச்செ யலா் உமரிசங்கா், ஆழ்வாா்திருநகரி ஒன்றியக் குழுத்தலைவா் ஜனகா், தூத்துக்குடி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளா் ராமஜெயம், ஆழ்வாா்திருநகரி ஒன்றிய திமுக செயலா்கள் நவீன்குமாா், சதீஷ்கு மாா், முன்னாள் எம்எல்ஏ டேவிட்செல்வின் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இயேசு விடுவிக்கிறாா் விளையாட்டுத் துறை ஒருங் கிணைப்பாளா் மணத்தி எட்வின் வரவேற்றாா்.
அமச்சூா் கபடி கழக இணைச் செயலா் கந்தன், தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக அவைத்தலைவா் அருணாச்சலம், பொதுக்குழு உறுப்பினா் முத்து செல்வன், மாவட்ட கவுன்சிலா் செல்வக்குமாா் உள்பட பலா் பங்கேற்றனா்.