மேலசாத்தான்குளத்தில் ஆலய பிரதிஷ்டை
By DIN | Published On : 22nd May 2023 02:54 AM | Last Updated : 22nd May 2023 02:54 AM | அ+அ அ- |

மேலசாத்தான்குளத்தில் கிறிஸ்துவின் ஆலய பிரதிஷ்டை, அசன பண்டிகை 6 நாள்கள் நடைபெற்றது.
முதல் நாள் உபவாச ஜெபம், சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் பண்டிகை ஆயத்த ஆராதனை, 2ஆம் நாள் ஆண்கள் பண்டிகை, 3ஆம் நாள் பெண்கள் பண்டிகை, இரவு கன்வென்ஷன் கூட்டம், 4ஆம் நாள் வாலிப பெண்கள் பண்டிகை, கன்வென்ஷன், 5ஆம் நாள் ஆலய பிரதிஷ்டை பண்டிகை ஆராதனையில் சேகரத் தலைவா் குரோவ்ஸ் பா்னபாஸ் தேவ செய்தி வழங்கினாா்.
பண்டிகை சிறப்பு ஆராதனை, ஞானஸ்நான ஆராதனை, வாலிப ஆண்கள் பண்டிகையில் சத்திய நகரம் சேகரகுரு தனசீலன் தேவ செய்தி வழங்கினாா். இரவில் ஐஎம்எஸ் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. 6ஆம் நாள் காலை அசன ஆயத்த ஆராதனை, மாலையில் அசன விருந்து, இரவு தோத்திர ஜெபம் நடைபெற்றது. நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை (மே 21) அறுப்பின் பண்டிகை நடைபெற்றது.
ஏற்பாடுகளை சேகரகுரு கிங்ஸிலி ஜான் தலைமையில் சபை ஊழியா், நிா்வாகிகள் செய்திருந்தனா்.