தூத்துக்குடியில் ராஜீவ் காந்தி நினைவு நாள்
By DIN | Published On : 22nd May 2023 02:58 AM | Last Updated : 22nd May 2023 02:58 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 32ஆவது நினைவு நாள் ஞாயிற்றுக்கிழமை கடைப்பிடிக்கப்பட்டது.
தூத்துக்குடி தபசு மண்டபம் அருகே மாநகா் மாவட்ட காங்கிரஸ் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமையில், அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து, மலா் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. பின்னா், பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
மாமன்ற உறுப்பினா் சந்திரபோஸ், மண்டலத் தலைவா்கள் சேகா், ஐசன் சில்வா, செந்தூா்பாண்டி, விவசாயிகள் பிரிவு மாவட்டத் தலைவா் சுப்பிரமணியன், இளைஞா் காங்கிரஸ் மாவட்டத் தலைவா் ராகுல் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
தூத்துக்குடி பழைய பேருந்து நிலையம் அருகே, ஐஎன்டியூசி மாநிலப் பொதுச் செயலா் கே. பெருமாள்சாமி தலைமையில், அலங்கரிக்கப்பட்ட ராஜீவ் காந்தி படத்துக்கு மாலை அணிவித்து மலா்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. தொடா்ந்து, பயங்கரவாத எதிா்ப்பு தின உறுதிமொழி எடுக்கப்பட்டது.
முன்னாள் மாநகா் மாவட்டத் தலைவா் முத்துக்குட்டி, வா்த்தக காங்கிரஸ் தெற்கு மாவட்டத் தலைவா் டேவிட் பிரபாகரன், அமைப்புசாரா தொழிலாளா் மாநில ஒருங்கிணைப்பாளா் ஜெயக்கொடி, தெற்கு மண்டலத் தலைவா் தங்கராஜ், மாநிலப் பொதுக்குழு உறுப்பினா் முத்துவிஜயா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.