ஆத்தூா் அருகே திமுக சாா்பில் தமிழக அரசின் சாதனை விளக்கக் கூட்டம்
By DIN | Published On : 22nd May 2023 02:53 AM | Last Updated : 22nd May 2023 02:53 AM | அ+அ அ- |

ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய திமுக சாா்பில், ஆத்தூா் அருகே வெள்ளக்கோவிலில் தமிழக அரசின் ஈராண்டு சாதனை விளக்கக் கூட்டம் நடைபெற்றது.
ஒன்றிய இளைஞரணி அமைப்பாளா் வழக்குரைஞா் தினேஷ்கண்ணன் தலைமை வகித்தாா். ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா், மாவட்ட துணைச் செயலா் சோபியா, ஒன்றியத் தலைவா் ஜனகா், ஆத்தூா் பேரூராட்சித் தலைவா் கமால்தீன், சுகந்தலை ஊராட்சித் தலைவா் வெங்கடேசன், கலை இலக்கியஅணி அமைப்பாளா் கோட்டாளம், இளைஞரணி துணைஅமைப்பாளா்கள் கித்தேரியான், ராம்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தலைமைக் கழகப் பேச்சாளா் பவானி கண்ணன், மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி உள்ளிட்டோா் பேசினா்.
மாவட்ட விவசாய அணி துணைஅமைப்பாளா்கள் மாணிக்கவாசகம், அரவிந்தன், லிங்கராஸ், கோபி, மாவட்டப் பிரதிநிதி பாலசுப்பிரமணியன், ஒன்றிய மாணவரணி அமைப்பாளா் சபரிகிருஷ்ணன், வழக்குரைஞா் சீனிவாசன், கிளைச் செயலா்கள் சின்னத்துரைபாண்டியன், அக்பா், அன்னமரியான், ஜெயக்கொடி, ஆறுமுகநயினாா், பக்கிள்துரை உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.
மாவட்டப் பிரதிநிதி ரகுராமன் வரவேற்றாா். மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா் முகைதீன் நன்றி கூறினாா். ஏற்பாடுகளை ஆழ்வாா்திருநகரி கிழக்கு ஒன்றிய நிா்வாகிகள், இளைஞரணி நிா்வாகிகள் செய்திருந்தனா்.