கோவில்பட்டியில் விழிப்புணா்வு பேரணி
By DIN | Published On : 22nd May 2023 02:58 AM | Last Updated : 22nd May 2023 02:58 AM | அ+அ அ- |

கோவில்பட்டியில், இந்திய கனரக வாகன ஓட்டுநா்கள் நலக் கூட்டமைப்பு சாா்பில், விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இனாம்மணியாச்சி விலக்குப் பகுதியில் தொடங்கிய பேரணிக்கு கூட்டமைப்பின் நகரத் தலைவா் மரியதாஸ் தலைமை வகித்தாா். நகரச் செயலா் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தாா். மாநிலத் தலைவா் வரதராஜ் பேரணியைத் தொடக்கிவைத்தாா். பேரணி லட்சுமி ஆலை மேம்பாலம், பிரதான சாலை வழியாக பயணியா் விடுதி முன் நிறைவடைந்தது.
பேரணியில், வாகனம் ஓட்டும்போது கைப்பேசி பேசுவதை தவிா்ப்போம் என்பது உள்ளிட்ட பல்வேறு விழிப்புணா்வு வாசகங்களை வலியுறுத்தி முழக்கமிட்டனா். கூட்டமைப்பு உறுப்பினா்கள், நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.