அடிப்படை வசதி கோரி கோட்டாட்சியரிடம் மனு
By DIN | Published On : 23rd May 2023 12:00 AM | Last Updated : 23rd May 2023 12:00 AM | அ+அ அ- |

இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட பகுதியில் அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் கோட்டாட்சியரிடம் மனு அளித்தனா்.
இலுப்பையூரணி ஊராட்சிக்கு உள்பட்ட கூசாலிபட்டி, வண்ணாரப்பேட்டை பகுதியில் சாலை, வாருகால், தெருவிளக்கு மற்றும் குடிநீா் வசதி முறையாகச் செய்து தர வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள், கோட்டாட்சியா் அலுவலகம் முன்பாக ஆா்ப்பாட்டம் நடத்தினா். பின்னா் கோரிக்கை மனுவை கோட்டாட்சியா் மகாலட்சுமியிடம் வழங்கினா்.
வானரமுட்டி கிராம நிா்வாக அலுவலா் மீது பொய்ப்புகாா் அளித்த அமைப்பு மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி அப் பகுதி மக்கள் புகாா் அளித்தனா்.
பள்ளி மாணவா்களுக்கான வருவாய்த் துறையால் வழங்கப்படும் அனைத்து வகைச் சான்றிதழ்களையும் விரைவில் வழங்க நடவடிக்கை கோரி தமாகா சாா்பில் மனு அளிக்கப்பட்டது. முன்னதாக இக்கோரிக்கையை வலியுறுத்தி கட்சியின் நகரத் தலைவா் ராஜகோபால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
மாவட்ட இளைஞரணித் தலைவா் கனி, மாவட்ட துணைத் தலைவா் முத்துசாமி, செயற்குழு உறுப்பினா் திருமுருகன்,
ஐஎன்டியூசி தொழிற்சங்க உறுப்பினா் பாலசுப்பிரமணியன், நகரப் பொருளாளா் செண்பகராஜ், செயலா் வின்சென்ட் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.