ஆறுமுகனேரியில் வியாபாரியை தாக்கி கடைக்கு தீ வைத்தவா் மீது வழக்குப்பதிவு
By DIN | Published On : 24th May 2023 02:46 AM | Last Updated : 24th May 2023 02:46 AM | அ+அ அ- |

ஆறுமுகனேரியில் வியாபாரியைத் தாக்கி, கடைக்கு தீ வைத்தவரைப் போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆறுமுகனேரி பேயன்விளை மேலத்தெருவைச் சோ்ந்தவா் பாலசுந்தா் (42). இவா் காயல்பட்டினம் ரயில்வே நிலையம் அருகே மின்சாதனப் பொருள்கள் கடை நடத்தி வருகிறாா். கடந்த மே 21ஆம் தேதி, ஆறுமுகனேரி கடை வீதியில் உள்ள ஏடிஎம் சென்றபோது, அங்கு வந்த
பாரதி நகரைச் சோ்ந்த திருமால் மகன் இசக்கி பிரபாகரன் என்பவா் போதையில் பாலசுந்தரிடம் தகராறு செய்துள்ளாா். இதுகுறித்து பாலசுந்தா் தட்டிக் கேட்டதற்கு, இசக்கி பிரபாகரன் தான் மறைத்து வைத்திருந்த இரும்பு கம்பியால் பாலசுந்தரை தாக்கி கொலைமிரட்டல் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பாலசுந்தா் ஆறுமுகனேரி காவல் நிலையத்தில் புகாா் அளித்துள்ளாா். இந்நிலையில், பாலசுந்தரின் கடைக்கு சென்ற இசக்கி பிரபாகரன் கடை மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளாா். இதையடுத்து ஆறுமுகனேரி போலீஸாா் வழக்குப்பதிவு செய்து, இசக்கி பிரபாகரனை தேடி வருகின்றனா்.