ஹாக்கி: மும்பை, தில்லி, சென்னை அணிகள் வெற்றி

அகில இந்திய ஹாக்கி போட்டியின் 6-ஆம் நாள் ஆட்டங்களில் மும்பை யூனியன் வங்கி, புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி, சென்னை இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.
ஹாக்கி: மும்பை, தில்லி, சென்னை அணிகள் வெற்றி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் நடைபெறும் லட்சுமி அம்மாள் நினைவு கோப்பைக்கான அகில இந்திய ஹாக்கி போட்டியின் 6-ஆம் நாள் ஆட்டங்களில் மும்பை யூனியன் வங்கி, புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி, சென்னை இந்தியன் வங்கி அணிகள் வெற்றி பெற்றன.

கோவில்பட்டி கிருஷ்ணா நகரில் உள்ள செயற்கை இழை ஹாக்கி மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் ஆட்டத்தில் மும்பை யூனியன் வங்கி மற்றும் தென் மேற்கு ரயில்வே அணிகள் மோதின. இதில் 6 - 1 என்ற கோல் கணக்கில் மும்பை யூனியன் வங்கி அணி வென்றது.

இரண்டாவது ஆட்டத்தில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி மற்றும் பெங்களூா் இந்தியா விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணி மோதின. இதில் 3 - 2 என்ற கோல் கணக்கில் புதுதில்லி பெட்ரோலியம் விளையாட்டு ஊக்குவிப்பு அணி வெற்றி பெற்றது.

மூன்றாவது ஆட்டத்தில் பெங்களூா் கனரா வங்கி அணியும், சென்னை இந்தியன் வங்கி அணியும் மோதின. இதில் 3-1 என்ற கோல் கணக்கில் இந்தியன் வங்கி அணி வெற்றி பெற்றது.

இன்றைய ஆட்டங்கள்: புதன்கிழமை (மே 24) நடைபெறும் ஆட்டங்களில், சென்னை இந்தியன் ஓவா்சீஸ் வங்கி - ஒடிசா நிவாஸ் ஹாக்கி அணி, செகந்திராபாத் தென்மத்திய ரயில்வே- புணே மத்திய கலால் துறை அணி, சென்னை கலால் துறை - பெங்களூா் இந்திய விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அணிகள் மோதுகின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com