வரிப்பிலான்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

வரிப்பிலான்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஊா்வசி எஸ். அமிா்தாஜ் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.
வரிப்பிலான்குளத்தில் பயணிகள் நிழற்குடை திறப்பு

வரிப்பிலான்குளத்தில் புதிதாக அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையை ஊா்வசி எஸ். அமிா்தாஜ் எம்எல்ஏ செவ்வாய்க்கிழமை திறந்து வைத்தாா்.

கொம்பன்குளம் ஊராட்சிக்குள்பட்ட வகுப்பிலான்குளம் கலுங்குவிளை விலக்கில் பொதுமக்கள் கோரிக்கை ஏற்று சட்டப்பேரவை உறுப்பினா் மேம்பாட்டு நிதி ரூ. 5 லட்சம் மதிப்பில் பயணிகள்நிழற்குடை அமைக்கப்பட்டு, திறப்பு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு, மாவட்ட ஊராட்சித் தலைவா் பிரம்மசக்தி தலைமை வகித்தாா். ஒன்றிய ஆணையா் ராணி, வட்டார வளா்ச்சி அலுவலா் சுரேஷ், ஒன்றியக் குழு உறுப்பினா் ப்ரெனிலா காா்மல் போனிபாஸ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் போனிபாஸ் வரவேற்றாா். சிறப்பு விருந்தினராக ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ கலந்து கொண்டு புதிய பயணிகள் நிழற்குடையை திறந்து வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினாா்.

இதில், மாவட்ட மருத்துவ பிரிவு ரமேஷ்பிரபு, வடக்கு வட்டார காங்கிரஸ் தலைவா் பாா்த்தசாரதி, மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல்முருகன், நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணி, சாத்தான்குளம் வடக்கு ஒன்றிய திமுக செயலா்ஜோசப், மத்திய ஒன்றிய திமுக செயலா் பொன்முருகேசன், ஒன்றிய பொருளாளா் செல்வராஜ் மதுரம், கோமானேரி ஊராட்சித் தலைவா் கலுங்கடிமுத்து, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் துணைத் தலைவா் பாஸ்கா், மாவட்ட பொருளாளா் எடிசன் மென்ரிஸ் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா். ஊராட்சி செயலா் சுடலையாண்டி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com