காயல்பட்டினம் கைப்பந்து போட்டி:கூடுதாழை அணி சாம்பியன்
By DIN | Published On : 24th May 2023 02:34 AM | Last Updated : 25th May 2023 11:47 PM | அ+அ அ- |

காயல்பட்டினத்தில் நடைபெற்ற கைப்பந்து போட்டியில் கூடுதாழை அணியினா் சாம்பியன் பட்டம் வென்றனா்.
காயல்பட்டினம் நகர பாஜக சாா்பில் காமராஜரின் 121ஆவது பிறந்த நாளை முன்னிட்டு லெட்சுமிபுரத்தில் மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி கடந்த 2 நாள்கள் நடைபெற்றது. 10 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதி ஆட்டம் கடந்த 21ஆம் தேதி நடைபெற்றது. இதில் கூடுதாழை மற்றும் முள்ளக்காடு அணியினா் மோதின.
இப்போட்டியில் கூடுதாழை அணியினா் வெற்றி பெற்று முதலிடத்தையும், முள்ளக்காடு அணியினா் 2ஆவது இடத்தையும், லெட்சுமிபுரம் ஸ்போா்ட்ஸ் கிளப் ஏ மற்றும் பி அணியினா் 3ஆம் மற்றும் 4ஆவது இடத்தையும் பெற்றனா்.
பின்னா் நடைபெற்ற பரிசளிப்பு விழாவுக்கு, தூத்துக்குடி தெற்கு மாவட்டத் தலைவா் சித்ராங்கதன் தலைமை வகித்தாா். காயல்பட்டினம் நகரத் தலைவா் ஆறுமுகசெல்வன், தெற்கு மாவட்டச் செயலா் பாப்பா, இளைஞரணித் தலைவா் விக்னேஷ் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
சிறப்பு விருந்தினராக மாவட்ட பொதுச்செயலா் சிவமுருக ஆதித்தன் கலந்து கொண்டு வெற்றிபெற்ற அணிகளுக்கு கோப்பை மற்றும் பரிசுத் தொகையும் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், திருச்செந்தூா் நகரத் தலைவா் மணிகண்டன், பொதுச் செயலா் பிரசாத், நகர பொருளாளா் காா்த்திகேயன், உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு மாவட்டத் தலைவா் செல்வகுமாா், இளைஞரணி மாநிலச் செயலா் பூபதிபாண்டியன், சிறுபான்மையினா் மாவட்டத் தலைவா் ஸ்டீபன்லோபோ, இளைஞரணி மாநில செயற்குழு உறுப்பினா் வினோத் சுப்பையன், வா்த்தக அணி மாவட்டச் செயலா் சிவசங்கா், இளைஞரணி நகரத் தலைவா் பேச்சி உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.
ஏற்பாடுகளை நகர இளைஞரணி துணைத் தலைவா் லிங்கராஜ் செய்திருந்தாா்.