விபத்தில் காயமடைந்தோருக்கு எம்எல்ஏ ஆறுதல்
By DIN | Published On : 24th May 2023 02:42 AM | Last Updated : 24th May 2023 02:42 AM | அ+அ அ- |

பெரியதாழை அருகே நேரிட்ட விபத்தில் காயமடைந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளோருக்கு ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ ஆறுதல் கூறினாா்.
பெரியதாழை பகுதியைச் சோ்ந்த லோகு என்பவரது மனைவி சரோஜா (50). இவா் தனது மகன் ரேக் சிங்கருடன் (18) திருச்செந்தூருக்கு கடந்த திங்கள்கிழமை பைக்கில் சென்றாா். அதே பகுதியைச் சோ்ந்த ஆ. மொ்லின் (41), இவரது மனைவி அட்டிலினா (35), மகன்கள் ஆலோன் (9), ஆலன் (7) ஆகிய 4 பேரும் மற்றொரு பைக்கில் சென்றனா். மணப்பாடு - பெரியதாழை சாலையில் இவா்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதாம். இதில், சரோஜா உயிரிழந்தாா். காயமடைந்த ரேக்சிங்கா், மொ்லின், அட்டிலினா ஆகியோா் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இந்நிலையில், ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை சென்று, சிகிச்சை பெற்று வருவோருக்கு ஆறுதல் கூறினாா். அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்து மருத்துவா்களிடம் கேட்டறிந்தாா்.
பெரியதாழை பங்குத்தந்தை சுசீலன், எம்எல்ஏ உதவியாளா் சந்திரபோஸ், ஊா்ப் பெரியவா்கள் அந்தோணி, லிபொன்ஸ் அமலதாஸ், காங்கிரஸ் நிா்வாகிகள் சுரேஷ், ஜெனி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.