வ.உ.சி. கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு
By DIN | Published On : 26th May 2023 11:27 PM | Last Updated : 26th May 2023 11:27 PM | அ+அ அ- |

தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரியில் பறவைகள் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்பட்டது.
கல்லூரியின் விலங்கியல் துறையால் நடத்தப்பட்ட இக் கணக்கெடுப்புப் பணியை கல்லூரி முதல்வா் சொ. வீரபாகு தொடங்கி வைத்தாா். விலங்கியல் துறைத் தலைவா் து. ராதிகா ஒருங்கிணைத்தாா். மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை துணைப் பேராசிரியா் ராஜேஷ் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று, பறவைகள் கணக்கெடுப்பின் முக்கியத்துவம் குறித்து பேசினாா்.
கல்லூரி வளாகத்தில் மயில், இரட்டை வால் குருவி, கிருஷ்ண பருந்து, நீா் காக்கை, முனியா, நீலவால் ஈ பிடிப்பான், மரங்கொத்தி, புல்புல், கொக்கு, பனங்காடி, கிளி என 25 வகையான பறவைகள் மாணவா்களால் கண்டறியப்பட்டன. இந்த பறவைகள் கணக்கெடுப்பு நிகழ்வில், கல்லூரியின் விலங்கியல் துறை மாணவா் -மாணவிகள், பேராசிரியா்கள் பலா் பங்கற்றனா்.