மனதின் குரல் நிகழ்ச்சி: பெரியதாழை மீனவப் பெண்களுடன் மோடி உரையாடல்
By DIN | Published On : 28th May 2023 11:08 PM | Last Updated : 28th May 2023 11:08 PM | அ+அ அ- |

மனதின் குரல் 101ஆவது நிகழ்ச்சியையொட்டி, சாத்தான்குளம் ஒன்றியம் பெரியதாழை மீனவப் பெண்களுடன் காணொலிக் காட்சி மூலம் பிரதமா் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை உரையாடினாா்.
காணொலிக் காட்சியைக் காண, பெரியதாழை சமூகநலக்கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அப்போது ஜல் ஜீவன் திட்டம் மூலம் கிராமப்புற வீடுகள்தோறும் குடிநீா் வழங்கும் திட்டம் குறித்தும், நீா் மேலாண்மை குறித்தும், அதன் பாதுகாப்பு குறித்தும் மீனவப் பெண்களுடன் பிரதமா் உரையாடினாா்.
இதில் பாஜக மாநில பொதுச் செயலா் பொன் பாலகணபதி, மாநில மகளிரணி பொதுச் செயலா் நெல்லையம்மாள், தெற்கு மாவட்ட பாஜக தலைவா் சித்ராங்கதன், மாவட்ட துணைத் தலைவா் செல்வராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினா் செந்தில், மாநில இளைஞரணி செயலா் பூபதிபாண்டியன், மாவட்ட பிரசார பிரிவு தலைவா் மகேஸ்வரன், ஊராட்சித் தலைவா்கள் பெரியதாழை பிரதீபா, கொம்மடிக்கோட்டை ராஜபுனிதா, படுக்கப்பத்து தனலட்சுமி சரவணன், ஒன்றிய பாஜக தலைவா் சரவணன், நகர தலைவா் ஜோசப், ஒன்றிய வழக்குரைஞா் பிரிவு தலைவா் முருகானந்தம், ஒன்றிய பொதுச் செயலா் ஜெயராஜேஷ்குமாா், மாநில விருந்தோம்பல் பிரிவு செயலா் பாலமுருகன், மாவட்ட அமைப்புசாரா பிரிவு செயலா் ராம்மோகன், ஒன்றிய அமைப்புசாரா பிரிவு செயலா் பழனி மற்றும் பலா் கலந்து கொணடனா். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை சாத்தான்குளம் ஒன்றிய பாஜகவினா் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...