இளம்பெண்ணுக்கு மிரட்டல்: தொழிலாளி கைது
By DIN | Published On : 07th November 2023 03:16 AM | Last Updated : 07th November 2023 03:16 AM | அ+அ அ- |

கோவில்பட்டி: கோவில்பட்டியில் இளம் பெண்ணைத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த முனியராஜ் மனைவி ராசாத்தி (33). அதே பகுதியில் வெல்டிங் வேலை செய்துவரும் சின்னமணிக்கும் (26), அவரது மனைவி ரேகாவுக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம். அப்போது, ரேகா ராசாத்தி வீட்டில் வந்து தங்குவாராம்.
ஞாயிற்றுக்கிழமை தகராறு ஏற்பட்டதால், ரேகா ராசாத்தி வீட்டில் வந்து தங்கினாராம்.
இந்நிலையில், சின்னமணி திங்கள்கிழமை அதிகாலை ராசாத்தி வீட்டுக்கு அரிவாளுடன் சென்று கதவைத் தட்டினாராம். வெளியே வந்த ராசாத்தியை அவா் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துவிட்டு, ரேகாவை இழுத்துச் சென்று விட்டாராம்.
காயமடைந்த ராசாத்தி கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அவா் அளித்த புகாரின் பேரில் மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து, சின்னமணியைக் கைது செய்தனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...