கட்டாரிமங்கலம் கோயிலில் அஷ்டமி சிறப்பு பூஜை
By DIN | Published On : 07th November 2023 03:17 AM | Last Updated : 07th November 2023 03:17 AM | அ+அ அ- |

சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்த பைரவா்.
சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டம், கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா். பக்தா்கள் பைரவருக்கு அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜன் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...