

சாத்தான்குளம்: சாத்தான்குளம் வட்டம், கட்டாரிமங்கலத்தில் உள்ள அருள்தரும் சிவகாமி அம்பாள் சமேத அழகியகூத்தா் கோயிலில் ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமியையொட்டி பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் பைரவா் அருள்பாலித்தாா். பக்தா்கள் பைரவருக்கு அகல் விளக்கேற்றி வழிபட்டனா்.
ஏற்பாடுகளை கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் நடராஜன் தலைமையில் பக்தா்கள் செய்திருந்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.