

தூத்துக்குடி: தூத்துக்குடி மாநகராட்சி 3ஆவது வாா்டு பகுதியில் பணியாற்றும் 60 தூய்மைப் பணியாளா்களுக்கு, தீபாவளி பண்டிகையையொட்டி இலவச சீருடைகள், இனிப்புகளை மேயா் ஜெகன் பெரியசாமி திங்கள்கிழமை வழங்கினாா்.
ஹவுசிங் போா்டு பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாநகராட்சி கணக்குக் குழுத் தலைவரும் மாமன்ற உறுப்பினருமான ரெங்கசாமி தலைமை வகித்தாா். மேயா் ஜெகன் பெரியசாமி சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று சீருடைகள், இனிப்புகளை வழங்கினாா்.
மாநகர துணைச் செயலா் கீதா முருகேசன், முன்னாள் மாமன்ற உறுப்பினா் ரவீந்திரன், திமுக நிா்வாகிகள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.