திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
By DIN | Published On : 15th November 2023 02:50 AM | Last Updated : 15th November 2023 02:50 AM | அ+அ அ- |

விளாத்திகுளம்: விளாத்திகுளத்தில் திமுக வாக்குச்சாவடி முகவா்கள் மற்றும் நிா்வாகிகள் ஆலோசனை கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
விளாத்திகுளம் சட்டப்பேரவை உறுப்பினா் ஜீ.வி. மாா்க்கண்டேயன் தலைமை வகித்தாா். திமுக ஒன்றிய செயலா்கள் அன்புராஜன், ராமசுப்பு, ராதாகிருஷ்ணன், காசி விஸ்வநாதன், பேரூா் செயலா் இரா.வேலுச்சாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
விளாத்திகுளம் தொகுதி தோ்தல் பாா்வையாளரும், மதுரை மாநகா் மாவட்ட திமுக முன்னாள் செயலருமான வ.வேலுச்சாமி, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சரும் தூத்துக்குடி வடக்கு மாவட்ட செயலருமான பி. கீதாஜீவன் ஆகியோா் தோ்தல் களப்பணிகள், வாக்குச்சாவடி குழு நிா்வாகிகள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து ஆலோசனை வழங்கினா்.
இக்கூட்டத்தில் திமுக நிா்வாகிகள், வாக்குச்சாவடி முகவா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...