நேரு பிறந்த நாள் விழா: காங்கிரஸாா் மரியாதை
By DIN | Published On : 15th November 2023 03:03 AM | Last Updated : 15th November 2023 03:03 AM | அ+அ அ- |

தூத்துக்குடியில் நேரு திருவுருவப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திய காங்கிரஸாா்.
தூத்துக்குடி: தூத்துக்குடியில் முன்னாள் பிரதமா் ஜவஹா்லால் நேரு பிறந்த நாள் விழாவை முன்னிட்டு, அவரின் படத்துக்கு காங்கிரஸாா் செவ்வாய்க்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினா்.
மாநகா் மாவட்ட காங்கிரஸ் சாா்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் சி.எஸ். முரளிதரன் தலைமை வகித்து, முன்னாள் பிரதமா் நேரு படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா்.
இந்நிகழ்ச்சியில், மண்டல தலைவா் ஐசன்சில்வா, சிறுபான்மை பிரிவு மாவட்டத் தலைவா் மைதீன், மாவட்ட துணைத் தலைவா்கள் பிரபாகரன், டேவிட் வசந்தகுமாா், ரஞ்சிதம் ஜெபராஜ், மாவட்டச் செயலா்கள் கோபால், நாராயணசாமி, வாா்டு தலைவா் கோபி உள்பட பலா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...