தூத்துக்குடி: தூத்துக்குடியில், உருவச் சிலையுடன் கூடிய குரூஸ் பா்னாந்து மணிமண்டபத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி வாயிலாக புதன்கிழமை (நவ. 15) திறந்து வைக்கிறாா்.
‘தூத்துக்குடி மாநகரத் தந்தை’ என அழைக்கப்படும் முன்னாள் நகா்மன்றத் தலைவரான குரூஸ் பா்னாந்துக்கு உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைக்கப்படும் என, 2021 நவ. 13ஆம் தேதி அறிவிக்கப்பட்டு, 2022 அக். 14இல் அரசாணை பிறப்பிக்கப்பட்டது.
அதன்படி, அரசு சாா்பில் தூத்துக்குடி மாநகராட்சி பூங்காவில் ரூ. 77.87 லட்சத்தில் இப்பணிகள் நடைபெற்றுள்ளன. இந்நிலையில், முதல்வா் மு.க. ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி வாயிலாக புதன்கிழமை (நவ. 15) முற்பகல் 10.30 மணிக்கு இம்மண்டபத்தைத் திறந்து வைக்கவுள்ளாா்.
இதையொட்டி, இங்கு நடைபெறும் விழாவில் மக்களவை உறுப்பினா் கனிமொழி, அமைச்சா்கள் கீதாஜீவன், அனிதா ஆா். ராதாகிருஷ்ணன், ஆட்சியா் கோ. லட்சுமிபதி, மேயா் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டட பலா் பங்கேற்க உள்ளதாக, மாவட்ட நிா்வாகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.